முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள் மீதான வழக்கு விசாரணை மே மாதத்திற்கு ஒத்திவைப்பு..
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா - ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை மே மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 22.02.2018ஆம் நாளன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்க சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து
மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் து. ரவிகரன், மற்றும் எம்.கே.சிவிஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை 07.01.2019 இன்றைய நாள்
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந் நிலையில் குறித்த வழக்கு விசாரணை 27.05.2019 நாளுக்கு தவணையிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.