150 வருடங்களுக்கு பின் நீட்டப்பட்ட ரயில் பாதையில் பாீட்சாா்த்த ரயில்சேவை இன்று ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
150 வருடங்களுக்கு பின் நீட்டப்பட்ட ரயில் பாதையில் பாீட்சாா்த்த ரயில்சேவை இன்று ஆரம்பம்..

முதன் முதலாக இன்று மாத்தறையில் இருந்து பெலியத்தைக்கான பரிட்சார்த்த ரயில் சேவை இன்று இடம்பெற்றது சுமார் 150 வருடங்களின் பின்னர் நீட்டப்பட்ட (36KM) ரயில் பாதை போக்குவரத்தாகும். 

இது இலங்கையின் மிக நீளமான சுரங்க ரயில் பாதையாகும். இந்நிகழ்வில் அமைச்சர் அர்ஜுனா உட்பட ஏராளமான பயணிகளும் பங்கேற்றிருந்தனர். 

 இந்த ரயிலில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பெலியத்த ரயில் நிலையத்துக்கு சென்ற அமைச்சரிடம் இது மஹிந்த ராஜபக்‌ஷவால் அமைக்கப்பட்ட ரயில் பாதை எனத் தெரிவித்து மஹிந்தவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கும் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்கிருந்து சென்றுள்ளார்.

அத்துடன் குறித்த கண்காணிப்பு ரயிலில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள், பதாதைகளையும் தொங்க விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு