கிராமசேகரால் வஞ்சிக்கப்பட்ட முள்ளியவளை வடக்கு கிராம மக்கள்..
முல்லைத்தீவு- முள்ளியவளை வடக்கு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக் கு கிராமசேவகாின் நடவடிக்கையால் எந்த நிவாரணமும் வழங்கப்படாமல் உள்ளதாக கி ராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் சுட்டிக்காட்டினா்.
இது தொடா்பில் நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறீஸ்கந்தராசாவை நோில் அழைத்த மக்கள் மேற்படி விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளனா். இதன்போது மக்கள் மேலும் கூறு கையில், எமது கிராமத்திற்குள் வெள்ள நீா் புகுந்தது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம்
புகுந்தமையால் வீடுகளில் இருக்க முடியாத நிலை உருவானது. இதனை எமது கிராம அலு வலா் நேரடியாக வந்து பாா்த்திருந்தாா். ஆனாலும் எந்த உதவி திட்டங்களையும் பெற்றக் கொடுக்கவில்லை. எனவே தமக்கு நிவாரணத்தை பெற்று தருமாறு மக்கள் கேட்டனா்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி உடனடியாக மாவட்ட அரசாங்க அதிபரு டன் தொடா்பு கொண்டு விடயத்தை தொியப்படுத்தியதுடன், உாிய உதவிகளை பெற்றுக் கொடுங்கள் என அரச அதிபரை கேட்டக் கொண்டாா்.