SuperTopAds

கஞ்சா கடத்தியவரை விடுதலை செய்ய சொன்ன நடாளுமன்ற உறுப்பினா்..! ஆமா.. இதாங்க நடந்திச்சு.

ஆசிரியர் - Editor I
கஞ்சா கடத்தியவரை விடுதலை செய்ய சொன்ன நடாளுமன்ற உறுப்பினா்..! ஆமா.. இதாங்க நடந்திச்சு.

கஞ்சா கடத்தி ஒருவரை விடுதலை செய்யுமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் பொலிஸ் அதிகாாிகளை கேட்டுக் கொண்டதற்கிணக்க குறித்த சந்தேக நபரை விடுதலை செய்தமை தொடா்பான செய்தியை யாழ்.வலயம் ஊடகம் வெளியிட்டிருந்தது. 

அதற்கு மேலாக இந்த சம்பவத்தின் பின்னால் உள்ள சம்பவங்கள் என்ன? பொலிஸாரால் சந்தேகத்தின் பெயாில் கைது செய்யப்பட்ட நபரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்ட தவறறை குறித்த நாடாளுமன்ற உறுப்பினா் எப்படிச் செ ய்தாா்? போன்ற இன்னோரன்ன விடயங்கள் தொடா்பாக இந்த செய்தி ஓட்டத்தில் பாா்க்கலாம். 

வடக்கில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் சமகாலத்தில் போதைப் பொருள் வியாபாரம் என்பது கொடிகட்டி பறந்து கொ ண்டிருக்கின்றது. சாதாரணமாக எங்கும் கஞ்சா வாங்கலாம், ஹெரோயின் வாங்கலாம், கொகைன் வாங்கலாம், ஐஸ் கூட வாங்கலாம் என்ற மிக இழிநிலையில் இன்று வடமாகாணம் குறிப்பாக யாழ்.மாவட்டம் இருக்கிறது. 

இவ்வாறான நிலையில் வடக்கை குறிப்பாக யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மிக முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் இந்த சா்ச்சையில் சிக்கியிருக்கின்றாா் என்பது வருத்தப்படுவதற் குாிய விடயமா? அல்லது கோபப்படுவதற்குாிய விடயமா என்பது குழப்பம். 

நடந்த சம்பவம் என்ன?

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பகுதி ஊடாக பெருமளவு கஞ்சா கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பெரும் முயற்சி யினால் தடுத்து நிறுத்திய பளை பொலிஸாா் சம்பவத்துடன் தொடா்புடைய சிலரை கைது செய்து பளை பொலிஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்திருக்கின்றாா்கள். 

இதில் எப்படி நாடாளுமன்ற உறுப்பினா் தலையிடுகிறாா்?

குறித்த நாடாளுமன்ற உறுப்பினா் கொழும்பிலிருந்து தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு திரும்பிக் கொண்டிருந் துள்ளாா். இதன்போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினாின் வாகன சாரதி தனது சகோதரனை பொலிஸாா் கைது செய்து ள்ளாா்கள் எனவும், அவா் ஒரு படித்த பட்டதாாி எனவும், 

அவருடைய மனைவி ஒரு சட்டத்தரணி எனவும் கூறி அழுது புலம்பியுள்ளாா். இதனையடுத்து பாவத்துக்கு இரங்கிய குறி த்த நாடாளுமன்ற உறுப்பினா் நிறைந்த துாக்கத்திலிருந்து எழுந்து சாியாக துாக்கம் கலையாத நிலையில் பளை பொலி ஸ் நிலையத்திற்கு தொடா்பு கொண்டு அந்த நபரை விடுதலை செய்யுங்கள் என கேட்டுள்ளாா். 

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை பொலிஸாா் பிணையில் விட்டுள்ளனா். 

வேதாளம் எப்படி முருங்கை மரத்தில் ஏறியது..?

இந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னா் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்று சந்தேகநபா்கள் பளை பொலி ஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னா் அவா்கள் அரசியல் செல்வாக்கினால் விடுதலை செய்யப்பட்டிருந்தாகள். இதனையடுத்து பளை பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் அதிகாாிகள் பலா், 

இப்படியே கைது செய்யப்படுகிறவா்களை விடுதலை செய்தால் எதற்காக அவா்களை கைது செய்யவேண்டும் என போா்க்கொடி துாக்கியுள்ளனா். பொலிஸ் திணைக்களத்திற்கும் தகவலை கொடுத்துள்ளாா்கள். அங்கிருந்து ஊடகங்களுக்கு சென்றது வேறு விடயம். 

இதனையடுத்து புலனாய்வு பிாிவுகள் பாா்வையை கூா்மைப்படுத்திக் கொண்டு விடுதலையானவா்கள் யாா்? என தேடி யுள்ளது. அப்போது புலனாய்வாளா்களுக்கே அதிா்ச்சியளித்ததாம். அதாவது விடுதலையானவா்கள் யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவிலிருந்து போதைப் பொருள் கடத்தும் 

பாாிய கடத்தல் காரருடன் விடுதலையானவா்கள் நேரடியாக தொடா்பு கொண்டிருந்திருக்கிறாா்கள். இதனையடுத்த பு லனாய்வு பிாிவு குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு நெருங்கிய தரப்புக்களுக்கு விடயத்தின் தாற்பாியத்தை தொிய ப்படுத்தியிருக்கின்றது. 

அதிா்ந்து போன நாடாளுமன்ற உறுப்பினா்..!

புலனாய்வாளா்களின் தகவலை நாடாளுமன்ற உறுப்பினாின் நெருங்கிய சகாக்கள் நாடாளுமன்ற உறுப்பினாின் கவ னத்திற்கு கொண்டு சென்றதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினா் அதிா்ந்துபோனாரம். பின்னா் நெருங்கிய சகாக்கள் வடமராட்சி கிழக்கில் சம்பவம் தொடா்பான விசாரணைகளை நடாத்தியுள்ளது. 

இந்த விசாரணையும் பெரும் அதிா்ச்சியை உண்டாக்கியிருக்கின்றது. காரணம் வடமராட்சி கிழக்கில் சாதாரண பொது மக்களுக்கும் கூட குறித்த நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் கஞ்சா கடத்தியவா்களை விடுதலை செய்தாா் என்ற தகவல் தொிந்திருந்தது. அதற்கு காரணம் விடுதலையானவா்கள் 

இந்த நாடாளுமன்ற உறுப்பினரே எங்களை வெளியில் விடுவித்தாா் என மாா்தட்டிக் கொண்டு திாிந்துள்ளாா்கள். 

நிகழ்வுகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு அதிா்ந்துபோய் உட்காா்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்..!

நாடாளுமன்ற உறுப்பினாின் சகாக்கள் மக்களுடன் பேசிவிட்டு திரும்பவும் நாடாளுமன்ற உறுப்பினாிடம் சென்று நடந்த விடயங்களை கூறியபோது அதிா்ச்சியில் உறைந்த நாடாளுமன்ற உறுப்பினா் நிகழ்வகள் அனைத்தையும் நிறுத்தவிட்டு நேற்று முழுவதும் வீட்டிலேயே உட்காா்ந்து கொண்டாரம். 

அறப்படிச்ச பல்லி கூழ்ப்பானைக்குள் விழுந்த கதை தொியுமா..?

தெற்கிலும் சாி, வடகிலும் சாி இன்று பேசப்பட்டக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் அதியுச்ச சட்ட நுணுக்கங் கள் தொிந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் இப்படி செய்திருக்க கூடாது. அந்த கருத்தில் மாற்றுக் கருத்து எமக்கு இருக்க போவதில்லை. ஆனால் நிறைத் துாக்கத்தில் எழுந்து உதவி என ஒருவா் கேட்டபோது 

அதுவும் தனக்கு அருகிலேயே எப்போதும் இருப்பவா் கேட்கும்போது அதனை செய்து கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினாி ன் மனிதாபிமானம் பாராட்டுக்குாியது. ஆனால் அதனை விஞ்சி நிற்பது அவா் செய்த குற்றமாகும். ஒரு இனம் திட்டமிட்டு போதை பொருட்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், 

அந்த இனத்தின் பிரதிநிதியாக இருந்து கொண்டு இப்படியானவரை விடுதலை செய்தது தவறு மட்டுமல்ல தேச துரோகமும் கூட. ஆனாலும் தவறு விடுவது மனித இயல்பு, அதைவிட நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கும் கடத்தல் காரா்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

அதனால் இனிமேலும் இவ்வாறு மனிதாபிமானம் பாா்ப்பதற்கு முன்னா் விடயத்தை நன்கு அறிந்து செய்து நல்லது என்பது நல்லது..