SuperTopAds

வடக்கு அபிவிருத்தி அமைச்சு ஊடாக பல மில்லியன் ரூபாய் செலவில் பாாிய அபிவிருத்தி திட்டங்கள், அமைச்சின் செயலாளா் மகிழ்ச்சி செய்தி..

ஆசிரியர் - Editor I
வடக்கு அபிவிருத்தி அமைச்சு ஊடாக பல மில்லியன் ரூபாய் செலவில் பாாிய அபிவிருத்தி திட்டங்கள், அமைச்சின் செயலாளா் மகிழ்ச்சி செய்தி..

யாழ்.மாவட்டத்தில் சுமாா் 270 மில்லியன் ரூபாய் செலவில் 4 இறங்குதுறைகள் மேம்படுத்தப்பட்டு புனரமைப்பு செய்யப்ப ட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இறங்குதுறைகள் ஊடாக 1280 மீனவ குடும்பங்கள் நன்மையடவா   ா்வகள்.

மேற்கண்டவாறு தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் புனா்வாழ்வு, வாடக்கு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி, இளைஞா் விவகார அமைச்சின் செயலாளா் வே.சிவஞானசோதி கூறி யிருக்கின்றா்.

மேற்படி விடயம் தொடா்பில் அவா் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறி க்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது. 

உயர் பெறுபேறுகளை வழங்கக்கூடிய வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற உட்கட்டமைப்பு கருத்திட்டங்களான மீன்பிடி இறங்குதுறைகளும் நங்கூரமிடும் தளங்களும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளன.

வடமாகாண அபிவிருத்தி கருத்திட்டங்கள் வரவு செலவுத்திட்ட நிதிப்படுத்தலில் பல பொருளாதார வலுவூட்டல் உட்கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையில் பலாலி வடக்கு இறங்குதுறையும், ஊரணி இறங்குதுறையும், சங்கானை பிரதேச செயலகப் பிரிவில் அராலி இறங்குதுறையும் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் பொலிகண்டி இறங்குதுறையும் 270 மில்லியன் ரூபாவில் மேம்படுத்தப்பட்டு 

கடற்தொழிலாளர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1280 கடற்தொழிலாளர் குடும்பங்கள் நன்மையடைவார்கள்.

மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்படுத்தலின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறையிலும் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலையிலும் இரண்டு பாரிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கான வடிவமைப்பு வேலைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன.

இவை தவிர யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டைதீவில் நங்கூரமிடும் தளமும், முனை, ஆதிகோவிலடி, தலைத்துறை, துறையூர், புங்குடுதீவு, அராலித்துறை, சாம்பலோடை, காக்கைதீவு இறங்குதுறைகளும்; மன்னார் மாவட்டத்தில் கொண்டை கச்சிகுடா, 

அரிப்பு, மீனப்பாடு, சிறுதோப்பு, வங்காலை, தலைமன்னார் இறங்குதுறைகளும்; கிளிநொச்சி மாவட்டத்தில் நாச்சிக்குடா, வாழைப்பாடு, பள்ளிகுடா இறங்குதுறைகளும் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரணைபாலை, சிலாவத்துறை, தீர்த்தகரை, களப்பாடு தெற்கு, களப்பாடு வடக்கு, கொக்கிளாய் இறங்குதுறைகளுக்கான மொத்த கிரயம் 201 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

இக்கருத்திட்டமானது வடமாகாண மீன்பிடித்துறையை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பை செய்யும்.

மேலும் பன்னாகம் மெய்கண்டான் பாடசாலைக்கு 45 மில்லியன் ரூபாய் செலவில் மூன்று மாடி கட்டட நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றன என அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.