வெள்ளத்தால் உண்டான அழிவுகளுக்கு இழப்பீடு நிச்சயம், இன்றும் அமைச்சா் ஒருவா் உறுதியளிப்பு..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் உண்டான அழிவுகளுக்கு இழப்பீடு நிச்சயம், இன்றும் அமைச்சா் ஒருவா் உறுதியளிப்பு..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள பெருக்கினால் அழிவடைந்த வயல்களுக்கு இழப்பீடு துாிதமாக வழங் கப்படும் என கூறியிருக்கும் அமைச்சா் எம்.ஹாிஷன், பூரணமாக அழிவடைந்த வயல்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையி ல் காப்புறுதி சபையினால் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளாா்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நிலைமைகளை ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்ட ஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக நெல் வயல்கள் முழுமையாக அழிந்திருந்தால் 40,000 ரூபாய் காப்புறுதி சபையால் வழங்கப்படும். அதற்கான மதிப்பீடுகள் சரியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அத்தோடு கால்நடைகள் இறந்திருந்தாலும் அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.

30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இத் தருணத்தில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அனைவரதும் கடமை.

வெள்ளத்தினால் பாதிப்புக்களுக்கு அதிகம் பொறுப்பு சொல்ல வேண்டியது எங்களுடைய அமைச்சு.

எனவே பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பது, குறித்து கவனம் செலுத்தப்படும் அத்தோடு இரண்டு வார காலத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை கிடைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு