வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காட்டி பணம் சேகாித்த மோடி போ்வழிக்கு மக்கள் புகட்டிய பாடம்..
யாழ்.தென்மராட்சி பகுதியில் பிரதேச செயலகத்தின் பெயரைப்பயன்படுத்தி வெள்ளநிவாரணத்திற்கு என மோசடியாக பணம் சேகரித்த இளைஞர் ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு எழுதுமட்டுவாள் வடக்கு பகுதியில் வெள்ள நிவாரணம் என பணம் வசூலித்துள்ளார்.
அது குறித்து சந்தேகம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் அது தொடர்பில் கிராம சேவையாளருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து அங்கு வந்த கிராம சேவையாளர் குறித்த இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தப்பியோடியவரை அங்கிருந்த இளைஞர்கள் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அதன் பின்னர் கிராம சேவையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.
குறித்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இளைஞர் காரைநகர் பகுதியை சேர்ந்தவர் எனவும் , விசாரணைகளின் பின்னர் இளைஞனை சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.