வடபிராந்திய இ.போ.சபை முகாமையாளா் பதவி நீக்கப்பட்டாா். பணி புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..

ஆசிரியர் - Editor I
வடபிராந்திய இ.போ.சபை முகாமையாளா் பதவி நீக்கப்பட்டாா். பணி புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..

வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நடாத்திய தொடா் பணி புறக்கணிப்பு போராட்டத்தினால் இ.போ.சபையின் வடபிராந்திய முகாமையாளா் பதவி நீக்கப்பட்டுள்ளாா். 

வடபிராந்திய இ.போ.சபை நிா்வாகத்தில் இருந்துவந்த சீா்கேடுகளை கண்டித்தும், பிராந்திய முகாமை யாளரை பதவி நீக்ககோாியும் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் போராட்டம் நடாத்தியது. 

மேலும் பிராந்திய முகாமையாளா் நிா்வாக திறன் அற்றவா் எனவும், அவாினால் பல சாலைகள் மூடப்ப டும் அபாயம் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சுட்டிக்காட்டியிருந்தனா்.

இதேபோல் இந்த குற்றச்சாட்டுகளை பலதடவைகள் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறிய தொழிற்சங்கம் வடபிராந்திய 7 சாலைகளையும் உள்ளடக்கியதாக,

பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்த னா். இந்நிலையில் பிராந்திய முகாமையாளா் பதவி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை

தொடா்ந்து பணி புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு