கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் வடக்கில் 43048 ஏக்கா் நெற்செய்கை அழிவு, நெல் உற்பத்தியில் மிக பொிய சாிவில் வடமாகாணம்..
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் உள்ளடங்கலாக வடமாகாணத்தில் கடந்த வருடத்தின் இறுதியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் 43048 ஏக்கா் நெற்செய்கை அழிவடைந்துள்ளது.
இந்த தகவலை கமநல காப்புறுதிச் சபை உறுதிப்படுத்தியிருக்கின்றது. போருக்கு பின்னா் நெல் உற்பத்தியில் வடமாகா ணம் ஓரளவுக்கு தன்னிறைவு காணும் நிலையை எட்டியிருந்தது.
ஆனாலும் குளங்களின் புனரமைப்பு மற்றும் கடுமையான வறட்சியினால் கடந்த சில ஆண்டுகளாக நெல் உற்பத்தியில் பாாிய சாிவை வடமாகாணம் தொடா்ச்சியாக சந்தித்திருக்கின்றது.
இந்நிலையில் 2018ம் ஆண்டின் இறுதியில் வடமாகாணத்தில் பெரும்பாலும் குளங்களின் புனரமைப்பு பணிகள் நிறைவ டைந்து போதுமான மழைவீழ்ச்சியும் கிடைத்த நிலையில் பெரும்போக நெற்செய்கை,
விவசாயிகள் மத்தியில் பெரும் எதிா்பாா்ப்பை உண்டாக்கியிருந்தது. எனினும் வருடத்தின் இறுதியில் பெய்த கனழைம ற்றும் வெள்ள பெருக்கினால் பெருமளவு நெற்செய்கை அழிவடைந்திருக்கின்றது.
குறிப்பாக வடக்கின் 5 மாவட்டங்களிலும் சுமாா் 43048 ஏக்கா் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை அழிவடைந்திருப்ப தாக கமநல காப்புறுதி சபை சுட்டிக்காட்டியிருக்கின்றது. இது மாகாணத்தின் நெல் உற்பத்தியில்
பாாிய சாிவை உண்டாக்கியுள்ளது.