இ.போ.ச வடபிராந்திய சாலை ஊழியா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில்..

ஆசிரியர் - Editor I
இ.போ.ச வடபிராந்திய சாலை ஊழியா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில்..

இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலை ஊழியா்கள் பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்து இன்று ப ணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனா். 

இது தொடர்பில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நிர்வாக திறமையற்ற வடமாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வட பிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றன.

ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய எம்மால் எழுத்து மூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்த 10 குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

இதனால் வட பிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும், கவலையுடனும் பணியாற்றி வருவதுடன், இதுவரை மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்களை 

வட பிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டிருந்தோம். எனினும் இன்று வரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. 

இதனால் வேறு வழியின்றி வட பிராந்திய தொழிலாளர்கள் தமது நன்மையினை கருதி வட பிராந்திய முகாமையாளரினை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து 

இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு