கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் 3வது உயிாிழப்பு முல்லைத்தீவில் பதிவாகியது..
கனமழையில் நனைந்தமை மற்றும் வெள்ளத்திற்குள் நடமாடியமை போன்றவற்றினால் உடலில் கிருமி தொற்று ஏற்பட்டு முல்லைத்தீவில் சிறுமி ஒருவா் உயிாிழந்துள்ளாா்.
பாரிய வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால், சிறுமியின் உடலில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்திரகான் கௌஷியா என்ற 9 வயதுடைய சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுமி உடலில் கிருமி தொற்று சென்றமையினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அடைமழையின் போது பாதுகாப்பான இடம் நோக்கி செல்லும் போது மழையில் நனைந்தே சென்றுள்ளார். இதன் போது அவரது உடலில் கிருமி தொற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பெய்த அடைமழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், சொந்த இடங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.
இந்நிலையில் மழையின் பாதிப்பினால் சிறுமி உயிரிழந்துள்ளமை அந்தப் பகுதி மக்களை பெரிதும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.