“எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள்” வவுனியா நகரசபைக்கு முகத்தில் அறையும் பொதுமக்கள்..

ஆசிரியர் - Editor I
“எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள்” வவுனியா நகரசபைக்கு முகத்தில் அறையும் பொதுமக்கள்..

வடக்கில் உள்ளுராட்சி சபைகள் தோற்றம் பெற்றதன் பின்னா் கழிவுகற்றல் பொறிமுறை சாியாக செயற்படுத்தப்படவில்லை. என பொதுமக்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. 

குறிப்பாக மாநகரசபை, நகரசபைகள், பிரதேசசபைகள் போன்ற உள்ளுராட்சி சபைகளில் கழிவ கற்றல் நகாின் சுத்தத்தைபேணுதல் என்பது பிரதான அம்சமாக இருக்கும் நிலையில், 

புதிதாக பதவியேற்ற இந்த சபைகள் தமது பணிகளை செய்யாமல் வேறு விடயங்களையெல்லா ம் செய்து கொண்டிருப்பதாகவே மக்கள் மத்தியில் அந்த குற்ச்சாட்டு இருந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அண்மையில் கரைச்சி பிரதேசசபை எல்லைக்குள் கழிவுகள் அகற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் குப்பைகள் பேசுவதுபோல் பதாகைகள் எழுதப்பட்டு 

அகற்றப்படவேண்டிய கழிவுகள் வீதியில் வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று வவுனியா நகர சபை எல்லைக்குள்ளும் அவ்வாறு கழிவுகள் பேசுவதுபோன்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு