மஹிந்தவுக்கு பதவி இல்லையென்றால் இலங்கை முழுவதும் வன்முறை வெடிக்கும்.

ஆசிரியர் - Admin
மஹிந்தவுக்கு பதவி இல்லையென்றால் இலங்கை முழுவதும் வன்முறை வெடிக்கும்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவை நீக்க முயற்சித்தால் வன்முறை வெடிக்கும் என மஹிந்த தரப்பினர் எச்சரித்துள்ளனர். அவ்வாறு ஒன்று நடந்தால் ஆட்சி முறையில் எந்த விடயம் குறித்தும் நம்பிக்கை வைக்க முடியாதென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராகியவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன கோபம் அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்தவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கவில்லை என்றால், பாரிய கிளர்ச்சி ஒன்று ஏற்படும் என அவர் குறிப்பிடடுள்ளார். முழுமையான ஆட்சி முறை குறித்து நம்பிக்கை இழக்கும் போது பொதுவாக கிளர்ச்சி ஒன்றே ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு