SuperTopAds

உள்ளூராட்சித்தேர்தல் - ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்தது தேர்தல் ஆணைக்குழு

ஆசிரியர் - Admin
உள்ளூராட்சித்தேர்தல் - ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்தது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரிய பின்னர், அதன் ஆரம்பகட்ட பணிகளைத் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை கொழும்புக்கு வரவழைக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கலந்துரையாடல் வரும் சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாளை (06) நடைபெறும் தேர்தல் ஆணைக்குழு கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து தேர்தல் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் முறை.

தேர்தல் தொடர்பான திட்டங்கள் மற்றும் அது தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.