SuperTopAds

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிப்புக்கள் குறித்து தரவு சேகாிக்கும் பணி ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிப்புக்கள் குறித்து தரவு சேகாிக்கும் பணி ஆரம்பம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் தரவுகளை சேகாிக்கும் பணியை மாவட்ட அனா்த்த முகாமைத்துவ பிாிவு இன்று ஆரம்பித்திருக் கின்றது. 

இவர்களுக்கு துணையாக மன்னார் மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.திலீபனும், திருகோணமலை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாசும் 

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து பணியாற்றுகின்றனர். இவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரத்தை இன்று காலை சந்தித்து விட்டு 

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமாருடன் இணைந்து தகவல் திரட்டும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் பிரதேச செயலகம், அனர்த்த புள்ளிவிபர தகவல்களை கிராம சேவகர் ஊடாக, 

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் வழங்கி வருகின்றது.