முல்லைத்தீவின் வெள்ள நிலைமைகளைப் பார்வையிட்டார். ரவிகரன்..
முல்லைத்தீவில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகளை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா - ரவிகரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் செல்வபுரம், கள்ளப்பாடு, தியோகுநகர், தீர்த்தக்கரை, முள்ளியவளை, வற்றாப்பளை, முறிப்பு போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகளையே அவர் இவ்வாறு பார்வையிட்டுள்ளார்.
மேலும் அனர்த்த பிரதேசசெயலகத்தினருடன் பேசி ஊருக்குள் புகுந்த வெள்ளத்தை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இவ்வாறு அனர்த்தம் ஏற்பட்ட இடங்களில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேசுவரன், தொம்மைப்பிள்ளை, க.அமலன், க.விஜிந்தன்,
ஜெகன், ரவீந்தின், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் ஆகியோரும் இணைந்து மக்களுடைய இடர்களை அவதானித்து தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.