சட்டத்திற்கு மாறான கடற்றொழிலை கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகள். நீதிமன்றம் சென்ற மீனவர்கள்..
முல்லைத்தீவு- நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டத்திற்கு மாறான கடற்றொழிலை நிறுத்துமாறுகோரி குறித்த பகுதியில் கடற்றொழில் செய்வதை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வழக்கு முல்லைத்தீவு நீதி மன்றுக்கு மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
இது தொடர்பில் வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் அமைப்பின் தலைவர் செ. யோகராசாவை தொடர்பு கொண்டு வினவியபோது அவர் கருத்து தெரிவிக்கையில். எமது மக்களின் பிரதான வாழ்வாதார தொழிலான நந்திக்கடல் களப்பில்
அண்மைக்காலமாக சட்டவிரோத கடற்தொழில் அதிகரித்துள்ளது. இதனால் சுமார் 5000 த்திற்கு மேற்பட்ட மீனவக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும்இ சட்டவிரோத கடற்தொழிலை முற்றாக தடைசெய்யுமாறும் சம்மந்தப்பட்ட
அதிகாரிகளிடம்இ குறிப்பாக நீரியல்வள திணைக்களத்தினரிடம் பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தபோதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சட்டவிரோத கடற்தொழிலால் இக்கிராமத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 350 க்கு மேற்பட்ட மீனவக்குடும்பங்களின் கையெழுத்துக்கள் அடங்கிய மனு ஒன்றை இன்று நாங்கள் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதுடன் கனம் நீதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்று தெரிவித்தார்.