சுமந்திரன் என்னை அழைத்துச் செல்ல வேண்டும்! கோரிக்கை விடுத்த கஜேந்திரகுமார்

ஆசிரியர் - Editor II
சுமந்திரன் என்னை அழைத்துச் செல்ல வேண்டும்! கோரிக்கை விடுத்த கஜேந்திரகுமார்

பொதுமக்களிடம் அரசியல் அமைப்பு தொடர்பில் விளக்கம் கொடுக்க செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், குறிப்பாக சுமந்திரன் என்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

புதியஅரசியல் யாப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்தும் சமகால அரசியல் நகர்வுகள் குறித்தும், பேசுவதற்கான விவாத நிகழ்ச்சி ஒன்று இன்றைய தினம் அரச தொலைக்காட்சியில் இடம்பெற்றது. இதன் போதே சுமந்திரனிடம் இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

புதியஅரசியல் யாப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில், வெளிப்படையாக எதுவும் எழுதப்படவில்லை. அதில் உள்ளடக்கங்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளது என்றும் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே பொதுமக்கள் விவாதிப்பதற்கு இடமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

உண்மையில் அரசியல் யாப்பின் உள்ளடக்கம் தொடர்பில் மக்கள் முழுமையாக தெரிந்தகொள்வது அவசியம். மூடிமறைக்காமல் வெளிப்படையாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.<

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு