2013ம், 2014ம் ஆண்டுகளில் யாழ்.மாநகரசபையில் இடம்பெற்ற நியமனங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
2013ம், 2014ம் ஆண்டுகளில் யாழ்.மாநகரசபையில் இடம்பெற்ற நியமனங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்..

2013ஆம் 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாநகர சபையில் இடம்பெற்ற நியமனங்கள் சிலவற்றில் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை. எனத் தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மின் இணைப்பாளர் மற்றும் பொறியியலாளர்கள் நியமனத்தின்போது கோரப்பட்ட விண்ணப்பங்களில் உரிய பதவிக்கான தகமைகள் குறைக்கப்பட்டு 

விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதோடு மற்றுமோர் பணிக்கு குறைந்த கல்வித் தகமை கொண்டவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இடம்பெற்ற நியமனத்தில் உள்வாங்கப்பட்ட பொறியியலாளர் நிறுத்தப்பட்டுள்ளபோதும் மின் இணைப்பாளர்கள் தொடர்ந்தும் பணியாற்றுகின்றனர். 

இதனால் குறித்த விடயம் கணக்காய்வு அறிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் கோப் கணக்காய்வு குழுவின் 

கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் கோப் குழு இரு விடயங்களிற்கும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். 

அவ் உத்தரவிற்கமைய பொறியியலாளர் நியமனம் தொடர்பில் பிரதம செயலாளரும் மின் இணைப்பாளர் நியமனம் தொடர்பில் மாகாண உள்ளூராட்சி ஆணைநாளரும் 

விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதற்கமைய இரு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு