வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடைய 9 போ் பொலிஸாரால் கைது, வாள்கள், மோட்டாா் சைக்கிள், ஹயஸ் வாகனம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடைய 9 போ் பொலிஸாரால் கைது, வாள்கள், மோட்டாா் சைக்கிள், ஹயஸ் வாகனம் மீட்பு..

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடைய ஒன்பது பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து ஆறு வாள்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனமொன்றையும் மீட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலம் வாள்வெட்டுக்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் 

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.

இக் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலையே நேற்றுத் திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையிலும் 

மேற்படி ஒன்பது பேரையும் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டவர்களையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் சுன்னாகம் பொலிஸாரிம் ஒப்படைத்துள்ளனர். 

இவர்களை நீதிமன்றில் முயற்படுத்தும் நடவடிக்கைகளையும் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

இதே வேளை வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பலரைப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளதாகவும் 

இன்றும் பலரைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு