தமிழ்த் தேசியப் பேரவையின் வரவு நிச்சயம் தமிழ் மக்களுக்கு விடிவை தரும்: ந.பொன்ராசா!

ஆசிரியர் - Admin
தமிழ்த் தேசியப் பேரவையின் வரவு நிச்சயம் தமிழ் மக்களுக்கு விடிவை தரும்: ந.பொன்ராசா!

வடகிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தமிழர் சம உரிமை இயக்கம் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர் ந.பொன்ராசா கருத்து பகிர்கையில் தமிழர் சம உரிமை இயக்கமும் வேறு சில பொது அமைப்புக்களும் ஏன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியப் பேரவையை அமைத்து தேர்தல் களத்தில் குதித்துள்ளன என்பதை இப்போதாவது எமது உறவுகள் அறிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.

எமது கண்ணுக்கு முன்னால் தமிழ்த் தேசியம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களையும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்களையும் இழந்த பின்னரும் நாம் ஒற்றையாட்சிக்குள்தான் வாழப்போகின்றோமா?

தமிழர் சம உரிமை இயக்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளான தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் என்ற இலக்குகளில் உறுதியாக நிற்கின்றது.

கல்வியும் மொழியும் பண்பாடும் நிலமும் சமயமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்களாகும். இந்தத் தூண்களின் ஒன்றையேனும் நாம் இழக்க விரும்பவில்லை.

இம்முறை மாற்றம் ஒன்றைக் காண்போம். தட்டிக் கேட்ட ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை ஆட்டம் காட்டி வருகின்றது.

தமிழ்த் தேசியப் பேரவையின் வரவு நிச்சயம் தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும் என நம்புவோமென தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு