SuperTopAds

வன்னி பகுதியில் மீண்டும் மீண்டும் புதையல்களின் மர்மம் என்ன!

ஆசிரியர் - Admin
வன்னி பகுதியில் மீண்டும் மீண்டும் புதையல்களின் மர்மம் என்ன!

வன்னி பகுதியில் மீண்டும் மீண்டும் கைவிடப்பட்ட விடுதலைப்புலிகளது உடமைகளை சூறையாடும் நடவடிக்கை தொடர்கின்றது. அவ்வகையில் புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் நகைகள் தோண்டி 11 பேரை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணியளவில் 11 பேர் கொண்ட குழுவினர் இரண்டு ஊர்திகளில் புதுக்குடியிருப்பு கைவேலிபகுதியில் உள்ள முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தங்கம் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இதுகுறித்து புதுக்குடியிருப்பு காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  மாத்தறை,கொழும்பு,கண்டி,கொட்டாவ,கடவத்த,கொட்டகேன,கிறான்பாஸ்,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த 11 பேரை கைதுசெய்துள்ளது.

அத்துடன் இவர்கள் வந்த டாட்டா கப் வாகனம் மற்றும் கையுண்டாய் வாகனங்களையும் தோண்டும் நடவடிக்கைக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்களை நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனரக வாகனம் சகிதம் புதையல் தோண்டிய சிலர் புதுக்குடியிருப்பில் கைதாகியிருந்தனர்.அத்துடன் தொடர்தேடுதலில் 70 இலட்சம் பெறுமதியான தங்க நகை மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.