நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது ஜே.வி.பி..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது ஜே.வி.பி..

அரசமைப்புக்கு முரணான வகையிலேயே ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார்.

எனவே, சட்டவிரோத நடவடிக்கைக்கு துணைபோகவேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

“ அரசமைப்பைமீறும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்லவுள்ளோம். ஜனநாயக விரோதச்செயற்பாட்டுக்கு எவரும் துணைபோகக்கூடாது. நாம் தேர்தலை எதிர்க்கடவில்லை. அது ஜனநாயக ரீதியில் நடத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்திவருகின்றோம்.

அரசமைப்பைமீறும் வகையிலேயே புதிய பிரதமரை ஜனாதிபதி நியமித்தார். தற்போது மீண்டுமொருமுறை நிறைவேற்று அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தியுள்ளார்’’ என்றும் அவர் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு