பிறந்த சிசுவை இரகசியமாகப் புதைத்த குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தந்தை கைது!

பிறந்த சிசுவை இரகசியமாகப் புதைத்ததாகக் கூறப்படும் இரு பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணத்துக்கு புறம்பான உறவின் மூலம் பிறந்த சிசுவே இவ்வாறு புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய சந்தேகநபருடன் திருமணத்துக்கு புறம்பான உறவிலிருந்ததாகக் கூறப்படும் 21 வயதுடைய பெண்ணிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸ் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்




