SuperTopAds

சுரேஷ் சல்லேயின் மனு மீதான தீர்ப்பு ஜனவரி 28

ஆசிரியர் - Editor II
சுரேஷ் சல்லேயின் மனு மீதான தீர்ப்பு ஜனவரி 28

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வழங்குவதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி சுரேஷ் சல்லே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு தொடர்பில் தீர்மானம் அறிவிக்கப்படவிருந்த நிலையில், இன்று (27) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தீர்ப்பை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார்.

தற்போது அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மனு தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீண்ட நேரம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் மீதான தீர்மானம் இன்று அறிவிக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio