SuperTopAds

இந்த வருடம் தமிழ் சினிமாவை காப்பாற்றிய திரைப்படங்கள்

ஆசிரியர் - Editor I
இந்த வருடம் தமிழ் சினிமாவை காப்பாற்றிய திரைப்படங்கள்

இந்த ஆண்டில் தமிழ் திரையுலகின் வர்த்தகத்தைத் தக்கவைக்க உதவிய ஐந்து திரைப்படங்களை தமிழ்நாட்டு திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிய திரைப்படங்களாக ஐந்து படங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.


அவற்றில் நடிகர் சூர்யா நடித்த ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘சீன்’ ஆகிய மூன்று திரைப்படங்களையும், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தையும், விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஐந்து திரைப்படங்களுமே நடப்பாண்டில் தமிழ் சினிமாத் துறையைப் பொருளாதார ரீதியாகக் காப்பாற்றியதாகத் திருப்பூர் சுப்பிரமணியம் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

Radio