கோ’ திரைப்படத்தை தவறவிட்ட நடிகர்

தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கக்கூடிய ‘கோ’ திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது இன்றும் தனக்கு வருத்தம் அளிப்பதாக நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனது திரைப்பயணத்தில் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தனது திரைப்பயணத்தில் ‘கோ’ திரைப்படத்தைத் தவறவிட்டதே மிகப்பெரிய வருத்தமாக உள்ளது.
அந்தப் படத்தில் நடித்திருந்தால் தனது திரைப்பயணத்தில் அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘கோ’ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், அப்போது ‘கண்டேன் காதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தான் இருந்ததால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ‘கோ’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாகவும் நடிகர் பரத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத வருத்தங்களில் ஒன்றாக இருப்பதாக பரத் கூறியுள்ளார்.




