SuperTopAds

இந்திய கிரிக்கெட்டிற்கு காத்திருக்கும் ஆபத்து

ஆசிரியர் - Editor I
இந்திய கிரிக்கெட்டிற்கு காத்திருக்கும் ஆபத்து

தோஹாவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 'ஏ' அணியிடம் இந்தியா 'ஏ' அணி தோல்வியடைந்தமை குறித்து இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கருத்துத் தெரிவித்துள்ளார்.

தோல்விகள் சில நேரங்களில் நன்மையளிப்பதுடன், அணிகள் மீண்டும் தமது செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கும் கவனம் செலுத்துவதற்கும் வாய்ப்பளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், வலுவான பந்துவீச்சாளர்களைக் கொண்டே சிறந்த கிரிக்கெட் அணிகளை உருவாக்க முடியும் எனத் தெரிவித்துள்ள அவர், இந்திய உள்நாட்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமற்ற வகையில் அமைக்கப்படும் ஆடுகளங்கள் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.  

Radio