தற்செயலா அல்லது குறி வைத்த தாக்குதலா ?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகளான நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் குறித்து அவ்வப்போது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் எழுவது வழக்கம்.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் நடிகை நயன்தாராவின் முகச்சாயலைக் கொண்ட பெண்ணொருவரின் காணொளி தீயாய் பரவி, இரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இணையவாசிகள் பலரும் அந்த காணொளியைப் பகிர்ந்து, நயன்தாராவுடன் ஒப்பிட்டுப் பல்வேறு கருத்துகளையும் கேலி கிண்டல்களையும் பதிவிட்டு வந்தனர்.
இவ்வாறானதொரு சூழலில், நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள திடீர் பதிவு ஒன்று இரசிகர்களைப் பெரும் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
"குரங்குகளை மனிதர்களுடன் ஒப்பிட வேண்டாம்" என த்ரிஷா பதிவிட்டிருப்பதாகப் பரவும் தகவல் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. விலங்குகள் நலன் சார்ந்த விழிப்புணர்வுக்காக த்ரிஷா இதைப் பதிவிட்டாரா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், இணையவாசிகள் இதற்குப் புதுப்புது அர்த்தங்களைக் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, நயன்தாரா சாயலில் இருக்கும் பெண்ணின் காணொளி வைரலாகி வரும் இதே நேரத்தில், "ஒப்பிட வேண்டாம்" என்ற தொனியில் த்ரிஷா வெளியிட்டிருக்கும் இந்தப் பதிவு தற்செயலானதா அல்லது மறைமுகமான தாக்குதலா என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இரு முன்னணி நடிகைகளின் இரசிகர்களும் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரம் தற்போது தென்னிந்திய திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.




