SuperTopAds

கிரிக்கெட்டில் வரலாறு படைத்த வியன் மல்டர்...

ஆசிரியர் - Editor I
கிரிக்கெட்டில் வரலாறு படைத்த வியன் மல்டர்...

தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரரான வியன் மல்டர், பங்ளாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாகச் செயற்பட்டு பல சாதனைகளைப் படைத்துள்ளார். செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்ளாதேஷ் அணி 91 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

 பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 494 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதில் ஏக்கமேன் 150 ஓட்டங்களையும், வியன் மல்டர் 100 ஓட்டங்களையும் பெற்றனர்.


இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்ளாதேஷ் அணியை மல்டர் தனது பந்துவீச்சால் நிலைகுலையச் செய்தார். அவர் 31 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 இதனால் பங்ளாதேஷ் அணி 184 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்களால் வெற்றிபெற்றதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2–0 எனக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் சதம் அடித்து 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம், ஒரே டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்திய வீரர்கள் பட்டியலில் மல்டரும் இடம்பிடித்துள்ளார். 

அத்துடன், டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 64 பந்துகளில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய சாதனையையும் படைத்துள்ளார். தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய முல்டரின் இந்த அபார ஆட்டம் கிரிக்கெட் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Radio