"செம்மணி மனிதப் புதைக்குழி விவகாரத்தில் உண்மைகள் நிச்சயம் கண்டறியப்படும்!"

செம்மணி மனிதப் புதைக்குழியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் என்புக்கூடுகள் தொடர்பில் நீதியான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி புதைகுழி தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்போம் என நீதி அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்படும்.
புதைகுழியில் இருந்து சிறுவர்களின் என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள போதிலும் , அவற்றின் உடற்பாகங்கள் தொடர்பான பகுப்பாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அவற்றினை முன்னெடுத்த பின்னர் அது தொடர்பிலான தேவையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.




