கிரிக்கெட் வரலாற்றில் விசித்திரமான அவுட்...

Deandra dottin WBBL டி20 போட்டியில் டீன்ட்ரா டோட்டின் விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார்.
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான WBBL டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகளின் டீன்ட்ரா டோட்டின் விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தது வீடியோ வைரலாகியுள்ளது.
டீன்ட்ரா டோட்டின்
WBBL 2026 டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட், மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 137 ஓட்டங்கள் எடுக்க, மெல்போர்ன் ரெனெகேட்ஸ் கடைசி பந்தில் இலக்கினை எட்டி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த மெல்போர்ன் ரெனெகேட்ஸ் வீராங்கனை டீன்ட்ரா டோட்டின் (Deandra Dottin) விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார்.
'Free Bowl' தண்டனை
WBBL விதிகளின்படி, வீராங்கனை ஒருவர் ஆட்டமிழந்த 75 வினாடிகளுக்குள் அடுத்த வீராங்கனை கிரீஸை அடைய வேண்டும். அப்படி நேரத்திற்குள் வர தவறினால், அவருக்கு 'Free Bowl' எனும் தண்டனை வழங்கப்படும்.
அதாவது, குறித்த வீராங்கனை 5 அடிகள் தூரத்தில் நிற்க, பந்துவீச்சாளர் ஸ்டம்பை நோக்கி பந்துவீச வேண்டும்.
அதன்படி இந்தப் போட்டியில் க்ளென் வீசிய பந்து ஸ்டம்புகளை தாக்க, டோட்டின் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது




