33 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் இந்தியாவின் மருந்துப் பொருள் ஏற்றுமதி!

2026–2027 நிதியாண்டில் இந்தியாவின் மருந்துப் பொருள் ஏற்றுமதி 33 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் என இந்திய மருந்துப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை எதிர்பார்த்துள்ளது.
ஏற்றுமதிச் சந்தைகளைப் பல்வகைப்படுத்தி, சர்வதேச சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில், இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் புதிய வாய்ப்புகளை இந்திய மருந்துத் துறை ஆராய்ந்து வருகிறது.
உலகின் முன்னணி பொதுப் பயன்பாட்டு மருந்து விநியோக நாடுகளில் ஒன்றான இந்தியா, சர்வதேச சந்தைகளுக்கு குறைந்த விலையில் மருந்துப் பொருட்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகளாவிய பொதுப் பயன்பாட்டு மருந்து விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளதுடன், 190க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவின் மருந்துப் பொருள் ஏற்றுமதி கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
• 2022–2023: 25.39 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
• 2023–2024: 27.85 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
• 2024–2025: 30.47 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
• 2025–2026: 31.12 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
• 2026–2027: 32–33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பீடு
வளர்ந்து வரும் சந்தைகளில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்துவதுடன், ஏற்கனவே நிலைபெற்றுள்ள சந்தைகளிலும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இந்திய மருந்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.




