SuperTopAds

30 பேர் பணயக்கைதிகளாகப் பிடிப்பு - கொலம்பிய இராணுவத்தால் அனைவரும் மீட்பு!

ஆசிரியர் - Editor IV
30 பேர் பணயக்கைதிகளாகப் பிடிப்பு - கொலம்பிய இராணுவத்தால் அனைவரும் மீட்பு!

பணத்தைக் கொண்டு சென்றுகொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தைக் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை காவல்துறை முறியடித்ததைத் தொடர்ந்து, கொலம்பியாவின் கார்டஜீனா நகரிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஆயுதம் ஏந்திய குழுவினர் சுமார் 30 பேரை ஒரு நாள் முழுவதும் பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர்.

இதன்போது, 10 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதுடன், ஏனையவர்கள் உலங்கு வானூர்திகள் மற்றும் விசேட படையினரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்த ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன.

அனைத்து பணயக்கைதிகளும் எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டதாக ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio