SuperTopAds

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் - இறுதிப்போட்டித் தகுதியை இழக்கும் நிலையில் இந்திய அணி!

ஆசிரியர் - Editor IV
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் - இறுதிப்போட்டித் தகுதியை இழக்கும் நிலையில் இந்திய அணி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பு குறைந்துள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னர் 51.52 சதவீத புள்ளிகளுடன் இருந்த இந்திய அணி, தற்போது 50 சதவீத புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, நியூசிலாந்து அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்குச் சரிந்துள்ளதுடன், அவுஸ்திரேலிய அணி 69.23 சதவீத புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தென்னாபிரிக்க அணி 75 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதற்கிடையில், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளன.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு இந்த தொடரில் இன்னும் ஆறு டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன.

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும், சொந்த மண்ணில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகளிலும் இந்தியா விளையாடவுள்ளது.

இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச்சில் ஆரம்பமாகவுள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவது இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும்.

Radio