SuperTopAds

நேபாளத்திற்கு 1.62 பில்லியன் டொலர் பொருளாதார உதவித் தொகுப்பை வழங்கும் இந்தியா!

ஆசிரியர் - Editor IV
நேபாளத்திற்கு 1.62 பில்லியன் டொலர் பொருளாதார உதவித் தொகுப்பை வழங்கும் இந்தியா!

நேபாளத்திற்கு 1.62 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவித் தொகுப்பை வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவுடன் நேற்று (23) நடத்திய இருதரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், ஆறு உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து இணைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

காவல்துறை, தடயவியல் அறிவியல், குடிமைப் பணிப் பயிற்சி, பாரம்பரிய மருத்துவம், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, நிலையான நகர்ப்புற அபிவிருத்தி, சுகாதாரம், கால்நடை மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததுடன், 5,200 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு புவியியல் நெருக்கத்தைத் தாண்டி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியா - நேபாள உறவுகள் பரஸ்பர மரியாதை, உறுதியான நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா குறிப்பிட்டுள்ளார்.

Radio