எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு - ஆட்சியிலிருந்து அகற்றப்படுகின்றார் நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குப் பதிலாக, முன்னாள் இராணுவத் தளபதி காடி ஈசன்கோட்டை அடுத்த பிரதமராக முன்மொழிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிடம் ஈசன்கோட்டை அரசு அமைக்கப் பரிந்துரைக்கவும், புதிய கூட்டணி அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இருப்பினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 61 இட பெரும்பான்மை இன்னும் உறுதியாகவில்லை.




