SuperTopAds

பாகிஸ்தானியருக்கு சலுகை - கத்தார் செல்ல 30 நாக்கள் இலவச சுற்றுலா விசா!

ஆசிரியர் - Editor IV
பாகிஸ்தானியருக்கு சலுகை - கத்தார் செல்ல 30 நாக்கள் இலவச சுற்றுலா விசா!

கத்தாருக்கு சுற்றுலா நோக்கில் பயணம் செய்யும் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜைகள், குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் விமான நிலையத்தில் வருகையின்போது 30 நாட்களுக்கான சுற்றுலா விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும் என கத்தார் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, விசாவைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பயணிகள் குறைந்தபட்சம் 5,000 கத்தார் ரியால்களை பணமாகவோ அல்லது செல்லுபடியாகும் கடன் அட்டையில் அதற்குச் சமமான தொகை கிடைக்கக்கூடிய வகையிலோ வைத்திருக்க வேண்டும்.

மேலும், உறுதிப்படுத்தப்பட்ட திரும்பிச் செல்லும் விமானப் பயணச்சீட்டு மற்றும் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், பாகிஸ்தானிலிருந்து நேரடியாக கத்தாருக்கு வருகை தரும் பயணிகள் போலியோ தடுப்பூசி பெற்றமைக்கான சான்றிதழையும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விசா ஆரம்பத்தில் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதுடன், உறுதிப்படுத்தப்பட்ட திரும்பிச் செல்லும் பயணச்சீட்டையும் கொண்டிருந்தால் மேலும் 30 நாட்களுக்கு விசாவை நீடித்துக்கொள்ள முடியும்.

இதற்கிடையில், வணிக நோக்கங்களுக்காக கத்தாருக்கு வருகை தரும் பாகிஸ்தான் நாட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவே தங்களது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Radio