SuperTopAds

உலகின் சக்திமிக்க நாடுகள் மக்களுக்கு விடுக்கும் அவசரகால எச்சரிக்கை !

ஆசிரியர் - Editor IV
உலகின் சக்திமிக்க நாடுகள் மக்களுக்கு விடுக்கும் அவசரகால எச்சரிக்கை !

உலகின் பல நாடுகள் போர் அச்சுறுத்தல்கள், இணையவழித் தாக்குதல்கள், மின்சாரத் தடை, இயற்கைப் பேரிடர்கள் மற்றும் உணவு, எரிபொருள் விநியோகப் பாதிப்புகளை எதிர்கொள்ள மக்களை முன்கூட்டியே தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.

குறிப்பாக, 72 மணிநேரம் முதல் 10 நாட்கள் வரை தன்னிறைவுடன் வாழ்வதற்கான வழிகாட்டுதல்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

பிரித்தானியாவில் 2026 அக்டோபர் 22 அன்று தொடங்கப்பட்ட Be Ready திட்டத்தின் மூலம் புயல், வெள்ளம், மின்சாரத் தடை, இணைய முடக்கம் மற்றும் குடிநீர் விநியோகப் பாதிப்புகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் காட்டுத்தீ, வெள்ளம், புயல், தொழிற்சாலை விபத்துகள், இணையத் தாக்குதல்கள் மற்றும் மின்சாரத் தடைகளை எதிர்கொள்ள 72 மணிநேர அவசரகாலப் பொருட்களைத் தயாராக வைத்திருக்க அறிவுறுத்துகிறது.

பெல்ஜியத்தில் இயற்கைப் பேரிடர்கள், இணையத் தாக்குதல்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத் தடைகளைச் சமாளிக்க குடும்ப அவசரகாலத் திட்டங்களை வலியுறுத்துகிறது.

லக்சம்பர்க்கில் 2026 அக்டோபர் 9 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட 72 மணிநேர வழிகாட்டி, தொழில்நுட்பக் கோளாறுகள், இணையத் தாக்குதல்கள், சுகாதார நெருக்கடிகள் மற்றும் மின்சாரத் தடைகளை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டது.

நெதர்லாந்து மின்சாரத் தடை, இணையத் தாக்குதல்கள், குடிநீர் விநியோகப் பாதிப்பு மற்றும் சர்வதேச நெருக்கடிகளால் ஏற்படும் உணவு, எரிபொருள் தட்டுப்பாடுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்துகிறது.

அயர்லாந்து புயல், வெள்ளம், மின்சாரத் தடை, தொலைத்தொடர்பு முடக்கம் மற்றும் விநியோகச் சங்கிலிப் பாதிப்புகளைச் சமாளிக்க அவசரகாலத் தயாரிப்பை வலியுறுத்துகிறது.

பின்லாந்து ரஷ்யாவுடனான எல்லைப் பாதுகாப்பு, பிராந்தியப் பதற்றம், இணையத் தாக்குதல்கள், கடுமையான குளிர்காலம் மற்றும் மின்சார விநியோகத் தடைகளை முக்கிய அபாயங்களாகக் கருதுகிறது.

டென்மார்க் இணையத் தாக்குதல்கள், எரிசக்தி நெருக்கடி, மின்சாரத் தடை மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்துகிறது.

சுவீடன் ரஷ்யா–உக்ரைன் போரைத் தொடர்ந்து அதிகரித்துள்ள ஐரோப்பியப் பாதுகாப்புப் பதற்றம், இராணுவ அச்சுறுத்தல்கள், இணையத் தாக்குதல்கள் மற்றும் முக்கியச் சேவைகள் முடங்கும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு ஒரு வாரத் தயாரிப்பை வலியுறுத்துகிறது.

நோர்வே ரஷ்யாவுடனான புவியியல் அருகாமை, ஆர்க்டிக் பிராந்தியத்தின் இராணுவ முக்கியத்துவம், இணையத் தாக்குதல்கள், பனிப்பொழிவு மற்றும் புயல்களால் ஏற்படக்கூடிய விநியோகத் தடைகளை எதிர்கொள்ள ஒரு வாரத்திற்கான பொருட்களை வைத்திருக்க அறிவுறுத்துகிறது.

எஸ்தோனியா ரஷ்யாவுடனான எல்லை, இராணுவப் பதற்றம், இணையவழித் தாக்குதல்கள், மின்சார மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் மீதான பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு வாரத் தன்னிறைவை வலியுறுத்துகிறது.

ஜெர்மனி  ரஷ்யா–உக்ரைன் போர், ஐரோப்பியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், இணையத் தாக்குதல்கள், நாசவேலைகள், மின்சாரத் தடை மற்றும் விநியோகச் சங்கிலிப் பாதிப்புகளை எதிர்கொள்ள இயன்றவரை 10 நாட்களுக்குத் தேவையான பொருட்களைச் சேமிக்க அறிவுறுத்துகிறது. குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கான பொருட்களையாவது வைத்திருக்க வேண்டும் எனவும் கூறுகிறது.

இதே நேரம் அமெரிக்கா தனது முக்கிய இராணுவத் தளங்கள் வெளிப்புற மின்சாரம் மற்றும் விநியோக அமைப்புகள் பாதிக்கப்பட்டாலும் 90 நாட்கள் இயங்குவதற்கான FORTRESS America திட்டத்தை முன்னெடுக்கிறது.

ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள குறைந்தது மூன்று நாட்கள், இயன்றால் ஒரு வாரத்திற்கான பொருட்களைத் தயாராக வைத்திருக்க அறிவுறுத்துகிறது.

இந்த நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அடுத்த 72 மணிநேரத்தில் உலகப் பேரழிவு நிகழப்போகிறது என்று அறிவிக்கவில்லை.

ஆனால் அனைத்துமே ஒரே வேளையில் இயற்கை மற்றும் போர் சார்ந்த எச்சரிக்கை மணியை தட்டுகிறது.

ஆனால் இவற்றை அலட்சியப்படுத்த முடியாதென்று தோன்றுகிறது உலகநாடுகளெங்கும் அரசியல், போர் இதைத்தாண்டி இயற்கையின் எச்சரிக்கை அச்சுறுத்தல்களை தந்த வண்ணமேயிருக்கின்றன.

மின்சாரம் முடங்கினால் குடிநீர், மருத்துவம், வங்கிச் சேவைகள், போக்குவரத்து, இணையம் என மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படலாம்.

எனவே ஒவ்வொரு குடும்பமும் குடிநீர், உணவு, மருந்துகள், மின்கல விளக்கு, தொலைபேசி சார்ஜர், முதலுதவிப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது அவசியம்.

ஆனால் 72 மணிநேரம் என்பது உலக அழிவுக்கான கவுண்ட்டவுன் அல்ல. எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொள்ள மனிதர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மட்டுமே அச்சம் தேவையில்லை

Radio