போர் மூள்வது தொடர்பான எந்தவொரு சாத்தியக்கூறையும் ஈரான் நிராகரிக்கவில்லை - அப்பாஸ் அராக்சி!

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அல் ஜசீரா ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட கருத்துகளில், போர் மூள்வது தொடர்பான எந்தவொரு சாத்தியக்கூறையும் ஈரான் நிராகரிக்கவில்லை என்றும், அனைத்துச் சூழல்களையும் எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஈரான் தனது ஆயுதக் களஞ்சியத்தைப் நவீனப்படுத்தியுள்ளதாகவும், தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ரீதியிலான பலவீனங்களைச் சரிசெய்துள்ளதாகவும், புதிய ஆயுதங்களைச் சோதித்துப் பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், அந்நாட்டின் ஆயுதப் படைகள் மிக உயர்ந்த செயல்பாட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.




