கடலுக்குள் மூழ்கிய காபோனின் பிரம்மாண்ட எண்ணெய் துளையிடும் தளம்!

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால், கடலில் அமைந்திருந்த பிரம்மாண்ட எண்ணெய் துளையிடும் தளம் ஒன்று சனிக்கிழமை கடலுக்குள் மூழ்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து காணாமல் போன ஐந்து பேரைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த தளத்தில் இருந்த 115 பேரில், 110 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய ஐந்து பேரின் நிலை என்ன என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகாத நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவத்துக்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.




