கத்தாரில் சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய கட்டுப்பாடு?

கத்தாரில் சமூக ஊடகப் பிரபலங்கள் (Social Media Influencers) மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த உரிமம் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் முன்மொழிவு ஒன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் ஷூரா கவுன்சிலினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு, தேவையான சட்ட மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் முன்னெடுக்கப்படும் என ஒக்டோபர் 29ஆம் திகதி அல் ஷர்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சமூக விழுமியங்கள் மற்றும் தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பதுடன், தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சமூக ஊடகப் பிரபலங்களுக்கான உரிமத் தகுதிகள், விளம்பர விதிமுறைகள் மற்றும் தொழில்முறைப் பொறுப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை நுகர்வோர் பாதுகாப்பு, விளம்பர வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடக உள்ளடக்கங்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.




