ஈரான் ஒருபோதும் பிற நாடுகளின் விருப்பத்திற்கு அடிபணியாது - முகமது ரெசா ஆரேஃப்!

அமெரிக்கா தொடுத்துள்ள கடுமையான பொருளாதாரப் போரையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு, அவற்றை நாட்டின் புதிய வாய்ப்புகளாக மாற்றுவோம் என ஈரானின் முதல் துணைத் தலைவர் முகமது ரெசா ஆரேஃப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒருபோதும் பிற நாடுகளின் விருப்பத்திற்கு அடிபணியாது என்றும், பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ள நாடு முற்றிலும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.




