இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாற்றப்படும் - ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டால், இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ஒரே மணிநேரத்திற்குள் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாற்றப்படும் என ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் செய்யும் சிறிய தவறான கணக்கீடும் பெரும் அழிவை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.




