'பத்ரு' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நான்கு நாடுகள்!

துருக்கி, கத்தார், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நான்கு நாடுகள் கூட்டு ஆயுத உற்பத்தி மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க 'பத்ரு' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தோஹாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு தொழில்நுட்பப் பகிர்வு, பயிற்சி மற்றும் கூட்டு ஆயுத உற்பத்தி குறித்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.




