SuperTopAds

சூடான் அபியேய் சந்தையில் ட்ரோன் தாக்குதல் - 73 பேர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor IV
சூடான் அபியேய் சந்தையில் ட்ரோன் தாக்குதல் - 73 பேர் உயிரிழப்பு!

சூடான் – தெற்கு சூடான் இடையே சர்ச்சைக்குரிய அபியேய் பகுதியில் உள்ள சந்தை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 73 பேர் உயிரிழந்ததுடன், 19 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குச் சூடான் இராணுவமே காரணம் என அபியேய் இடைக்காலத் தகவல் அமைச்சர் யோஹானா அகோல் ங்கோர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், தனது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை அவர் வெளியிடவில்லை.

Radio