SuperTopAds

பிரதமர் எடி ராமா பதவி விலக வேண்டும் - அல்பேனியாவிலும் வலுக்கும் போராட்டங்கள்!

ஆசிரியர் - Editor IV
பிரதமர் எடி ராமா பதவி விலக வேண்டும் - அல்பேனியாவிலும் வலுக்கும் போராட்டங்கள்!

அல்பேனியத் தலைநகர் திரானாவில், பிரதமர் எடி ராமாவின் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ள நிலையில், அரசு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைச் செலவு உயர்வு, கல்விச் செலவுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பிரதமர் எடி ராமா பதவி விலக வேண்டும் என்றும், கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

Radio