அமெரிக்காவை நெதன்யாஹு மற்றொரு போருக்குள் தள்ளுகிறார் - ஈரான் அமைச்சர்!

நேற்றையதினம், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த வீராப்பு பேச்சுக்களுக்கு, பதில் சாட்டையடியாக ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் பதிலளித்துள்ளார்.
“கடைசித் தடவை நீங்கள் "வேலையைமுடிக்க" விரும்பியபோது, ஈரான் இன்னும் வலுவாகவே வெளிப்பட்டது.
மீண்டும் உங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க விரும்புகிறீர்களா? தாராளமாக முயற்சியுங்கள்.
ஆனால் கவனமாக இருங்கள்; எங்களிடமும் முடிக்கப்படாத வேலைகள் இருக்கின்றன.
இஸ்ரேலுக்கு என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் சரி, அமெரிக்க அதிபருக்கு என்ன நேர்ந்தாலும் சரி, நெதன்யாகு சிறைக்குச் செல்லாமல் தப்பிப்பதற்காக அமெரிக்காவை நெதன்யாஹு மற்றொரு போருக்குள் தள்ளுகிறார்
என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி தெரிவித்துள்ளார். .




