சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதம் அதிகரிப்பு!

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 4.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
பொருளாதார வல்லுனர்களின் எதிர்பார்ப்பைக் காட்டிலும் இது அதிக வளர்ச்சியாகும்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் உற்பத்தித் துறையின் சீரான முன்னேற்றம் காரணமாகவே சீனா இந்த அபார சாதனையை எட்டியுள்ளதாக அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




