செலென்ஸ்கி போரை முடிக்க விரும்பவில்லை - அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டு!

உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி போரை முடிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அளிக்கும் நிதியுதவிகளால் அவர் அமைதியை விரும்புவதில்லை என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதைவிட நல்ல ஒப்பந்தத்தை உக்ரைன் செய்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நாட்டின் பெரும்பகுதி நிலங்கள், கடல் பகுதிகள் மற்றும் ராணுவத்தை இழந்து உக்ரைன் சீரழிந்துள்ளதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.




